தமிழில் ஜெயம் ரவி நடித்த தாம்தூம் படத்தின் மூலம் பிரபலமானவர் கங்கனா ரனாவத். தற்போது ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பதும் இவர்தான். ஹிந்தி சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூட சொல்லலாம். இணையத்தில் இவர் போல் ஆக்ட்டிவாக யாரையும் பார்க்க முடியாது. தினசரி டாக் ஆஃப் தி டவுனில் இருப்பது கங்கனாவின் வழக்கம்.

கங்கனா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தலைவி. விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று குறித்த படமாகும். இதில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் பாலிவுட் பிரபலம் கங்கனா ரனாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். இதன் ஒரே ஒரு கட்ட படப்பிடிப்பு மட்டும் மீதியுள்ளது. விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார்.

தலைவி படத்திற்காக தமிழில் பேசவும் பயிற்சி எடுத்துக் கொண்டார் கங்கனா. அது மட்டுமின்றி பாரதநாட்டியம் ஆடவும் கற்று கொண்ட அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பரதநாட்டிய உடையில் எடுத்த சில புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். அது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார். இந்த படம் ஓடிடி-ல் வெளியாகக்கூடும் என்று சமீபத்தில் வதந்தி கிளம்பிய நிலையில், தலைவி திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெளிவு படுத்தினர்.

ஜெயலலிதா ரோலில் நடிப்பதற்காக தனது உடல் எடையை 10 கிலோ வரை அதிகரித்துள்ளார் கங்கனா. அது மட்டுமின்றி அவர் ஜெயலலிதா போல தோற்றமளிப்பதற்காக ஸ்பெஷலான prosthetic மேக்கப் போடப்படுகிறது. அதற்காக கங்கனா அமெரிக்காவுக்கு சென்று prosthetic லுக் டெஸ்ட் எடுத்தார் என்றும் செய்திகள் தெரியவந்தது. ஜேசன் காலின்ஸ் என்ற ஹாலிவுட் புகழ் கலைஞர் தான் கங்கனாவின் தோற்றத்திற்காக இந்த அப்படத்தில் பணியாற்றுகிறார். அவர் Blade Runner, Captain Marvel போன்ற பல படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் படத்தின் இசை பற்றி ட்விட்டர் வாசிகளுடன் பகிர்ந்துள்ளார். படத்தின் இசை அதிகம் பேசப்படும். ரெட்ரோ காலத்து இசை பயணம் செய்தால் போல் இருக்கும். இசை ஜாம்பவான் MSV அவர்களின் பாடல்கள் போல் அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார். கங்கனாவின் நடிப்பும் அற்புதமாக இருந்தது என கூறியுள்ளார்.

Q: #AskGV When is the music out for #Thalaivi? How you you find @KanganaTeam
as Jayalalitha?
- @Sanjeev69945031

A: pic.twitter.com/kyyaMJJbZF

— G.V.Prakash Kumar (@gvprakash) September 20, 2020