பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான 96 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தவர் நடிகை கௌரி கிஷன். பூச்செண்டு போல் இருக்கும் இவரது புன்னகைக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. சிறுவயது ஜானுவாக தோன்றி, இன்று தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் திரைப்படத்திலும் நடித்துள்ளார் கௌரி.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டிக்டாக் என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை கௌரி கிஷன், தனது ட்விட்டர் பக்கத்தில் செமெஸ்டர் தேர்வுக்கு தயாராகும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். லாக்டவுன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் இன்னும் ஸ்டுடென்ட்டாகவே உள்ளேன் என்று கிண்டலாக பதிவு செய்துள்ளார்.

Still Studenting. 🙃#Semesters around the corner pic.twitter.com/NeHM1uMK7q

— Gouri G Kishan (@Gourayy) May 28, 2020