பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான 96 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தவர் நடிகை கௌரி கிஷன். பூச்செண்டு போல் இருக்கும் இவரது புன்னகைக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. சிறுவயது ஜானுவாக தோன்றி ரசிகர்களை ஈர்த்தார். தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகிஇருக்கும் கௌரி கிஷன், படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்த ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்களில் கௌரியும் ஒருவர். இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கென தனி ரசிகர்கள் உண்டு. லாக்டவுனில் செமெஸ்டர் தேர்வுக்கு தயாராகும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். லாக்டவுன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் இன்னும் ஸ்டுடென்ட்டாகவே உள்ளேன் என்று கிண்டலாக பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கௌரி கிஷன் நடிப்பில், மறையாத கண்ணீர் இல்லை ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. கௌரி கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது. தினேஷ் இளங்கோ மற்றும் அட்சய் SV இயக்கத்தில் உருவாகும் இந்த படைப்பிற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். சூப்பர் சிங்கர் புகழ் பாடகி ஸ்ரீநிஷா ஜெயசீலன் பாடியுள்ளார். மதன் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். மாஸ்டர் படத்தின் உதவி இயக்குனர்களில் ஒருவரான விஷ்ணு எடவன் லிரிக்ஸ் எழுதியுள்ளார். மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றுக்கும் விஷ்ணு எடவன் பாடல் வரிகள் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மறையாத கண்ணீர் இல்லை குறும்படமா ? படமா ? அல்லது ஆல்பம் பாடலா ? என்பதை தெரிந்துகொள்ள ஆர்வத்தில் உள்ளனர் திரை ரசிகர்கள்.

கலைப்புலி S தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் கௌரி கிஷன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்க நடிகர் லால், நட்டி நட்ராஜ், லக்ஷ்மி பிரியா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் படத்தின் டைட்டில் லுக் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார் கௌரி கிஷன். தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதிக எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

Beginning my birthday with a new venture ✨@redwhitestudios @mathanrajoffl @DineshElango_ @AtchaySv @JenMartinmusic @VishnuEdavan1#maraiyadhakanneerillai #mki #redandwhitestudios pic.twitter.com/ieRy3bsInj

— Gouri G Kishan (@Gourayy) August 17, 2020