நட்டி நட்ராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் காட்ஃபாதர். அறிமுக இயக்குனர் ஜெகன் ராஜசேகர் இயக்கிய இப்படத்தில் அனன்யா, மாரிமுத்து, மாஸ்டர் அஷ்வந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நடிகர் லால் வில்லனாக நடித்து அசத்தினார். ஆக்‌ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படத்தை ஜி.எஸ். ஆர்ட்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் கிளாப் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் தயாரித்தது.

சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு நவின் ரவீந்திரன் இசையமைத்திருந்தார். சதுரங்க வேட்டை, ரிச்சி, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து நட்டி மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் சீரான வரவேற்பு கிடைத்தது.

தற்போது தாக்கும் தாக்கும் பாடலுடன் கூடிய படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது. படத்தில் இடம்பெற்ற வீடு முழுக்க முழுக்க செட் என்பது இந்த வீடியோவின் மூலம் தெரிகிறது.