நட்டி நட்ராஜ் நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளியான திரைப்படம் காட்ஃபாதர். அறிமுக இயக்குனர் ஜெகன் ராஜசேகர் இயக்கும் இப்படத்தில் அனன்யா, மாரிமுத்து, மாஸ்டர் அஷ்வந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகர் லால் வில்லனாக நடித்துள்ளார். ஆக்‌ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஜி.எஸ். ஆர்ட்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் கிளாப் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ளது.

சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு நவின் ரவீந்திரன் இசையமைத்திருந்தார். சதுரங்க வேட்டை, ரிச்சி, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து நட்டி மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு சீரான வரவேற்பு கிடைத்தது.

தற்போது படத்தின் மூன்றாம் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது. குழந்தையை தேடி வரும் ரவுடிகளிடமிருந்து தப்பிக்கும் காட்சி இதில் இடம்பெற்றுள்ளது.