கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். நவரச நாயகன் கார்த்திக்கின் மகனாக இருந்தாலும், தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்து ராமலிங்கம், இவன் தந்திரன் போன்ற படங்களில் இவர் நடித்தாலும் ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற அடல்ட் காமெடி திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இவரது நடிப்பில் கடைசியாக தேவராட்டம் திரைப்படம் வெளியானது. தற்போது மஃப்டி ரீமேக்கில் நடித்து வருகிறார்.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்களுக்கும் நோய் பரவும் அபாயம் இருக்கிறது. எனவே அவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள பாதுகாப்பு அணிகலன்களை போட்டு இருக்க வேண்டும். இந்நிலையில் வருங்காலங்களில் அவற்றிற்கும் பற்றாக்குறை வருமோ என்ற அச்சம் அதிகம் உள்ளது.

இந்நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக் ட்விட்டரில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில், கொரோனா பாதுகாப்பு கவசமான (PPE kits) சப்ளை செய்யும் ஒரு நபரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. மருத்துவர்கள். மருத்துவமனைகள், மற்றும் தன்னார்வலர்கள் யார் வேண்டுமானாலும் இவற்றை பெற்று கொள்ள என்னை அணுகலாம் என்று கூறியுள்ளார்.

Got a supplier for #PPEkits

Any hospitals, clinics or volunteers interested in obtaining these, please dm me for specs and other details.#StayHomeStaySafe pic.twitter.com/OiMIAKd62S

— Gautham Karthik (@Gautham_Karthik) April 20, 2020