சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 2019-ல் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை.அணு இம்மானுவேல் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

யோகிபாபு,சூரி,நடராஜன்,RK சுரேஷ்,பாரதிராஜா,சமுத்திரக்கனி,மீரா மிதுன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துதுள்ளனர்.அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து குடும்ப படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் செம ஹிட் அடித்திருந்தன.மேலும் இந்த படம் TRP ரேட்டிங்களிலும் புதிய சாதனைகளை படைத்தது.2019-ல் அதிகம் வசூல் செய்த படங்களில் ஒன்றாக நம்ம வீட்டு பிள்ளை படம் இருந்தது.இந்த படத்தின் பாடல்கள் யூடியூப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பல சாதனைகளையும் படைத்துள்ளது.

குறிப்பாக இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய காந்தகண்ணழகி பாடலின் வீடியோ செம வைரலாக இருந்தது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த பாடலில் வரும் கும்முறு டப்புறு வரியையும்,அந்த ஸ்டெப்பையும் பாடாமலும்,ஆடமாலும் இருந்திருக்க மாட்டார்கள்.தற்போது இந்த பாடலுக்கு வெளிநாட்டு பெண் ஒருவர் அதே ஸ்டெப்பை போட்டு வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.சிவகார்த்திகேயன் பாடல் உலகளவில் ரீச் ஆனதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

#GaandaKannazhagi
Dance☺️🎶 pic.twitter.com/EAm1uJV7vh

— はらだん (@Harada_Mao) November 30, 2020