2003-ம் ஆண்டு. சரியாக உலகக் கோப்பை கிரிக்கெட் காய்ச்சல் முடிந்து, நல்ல என்டர்டெயின்மென்ட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்த நேரம். கோடை கொண்டாட்டமாக வெளியானது தளபதி விஜய்யின் புதிய கீதை திரைப்படம். பாக்ஸ் ஆபீஸ் சாதனை, விஜய்யின் கேரீர் கிராஃப், தொழில்நுட்ப முன்னேற்றம் என்று எந்த ஒரு மைன்ட் செட் இல்லாமல் இந்த படத்தை அலசுவோம்.

சாரதி எனும் பாத்திரத்தில் நடித்திருப்பார் விஜய். மனுஷன் அப்படி ஒரு புத்திசாலி..ஸ்போர்ட்ஸ், படிப்பு, உலகத்துல இருக்குற எல்லா விஷயமும் சாரதிக்கு அத்துபடி. இப்படி இருக்குற இவரோட லைஃப்ல, விதி என்கிற விஷயம் எந்த அளவுக்கு விளையாடுது-ன்றது தான் இந்த புதிய கீதை படத்தோட கதை.

1. சாரதி கேரக்டர்-ல படம் ஃபுல்லா ஸ்பீடா, பாசிட்டிவா இருப்பாரு விஜய்.
2. விஜய் கைல ஆறு விரல் இருக்கும், மொத்தமா இரண்டு கைகளிலும் பதினோரு விரல்.
3. தளபதியோட வசனம்...நல்லவங்களுக்கு நா சாரதி, கெட்டவங்களுக்கு தீ..சாரதீ !!!
4. 2000 இந்த காலத்துல எல்லாரோட ஃபேவரைட்டா இருந்த நடிகை மீரா ஜாஸ்மினுக்கு இது தமிழ்ல இரண்டாவது படம்.
5. பாலிவுட்ட கலக்குன நடிகை அமீஷா பட்டேலுக்கு முதல் தமிழ் படம்.
6. 2000 இந்த காலகட்டத்துல பார்ட்-டைம் வேலை ரொம்ப பிரபலம். இதோட ரெஃபரென்ஸா இந்த படத்துல, படிச்சிட்டே நண்பர்களோட சேர்ந்து FastFood, ரியல் எஸ்டேட் போன்ற வேலைகளாம் செய்வாரு நம்ம தளபதி.
7. ரெட்டியார் ரோல்ல அசால்ட் செஞ்சிருப்பாரு மறைந்த நடிகர் கலாபவன் மணி.
8. கலாபவன் மணி பேசுற வசனம் ரொம்ப பிரபலம்...சாரதி என்ன பெரிய கொம்பா ? யூட்யூப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா இல்லாத காலத்துலயே ட்ரெண்ட்டான வசனம்.
9. தளபதி விஜய்யோட ரியல் ஃலைப் நண்பனான நடிகர் சஞ்சீவ், இந்த படத்துல சாரதியோட நண்பனா நடிச்சிருப்பாரு.
10. இயக்குனர், நடிகர், டான்ஸ் மாஸ்டரான நம்ம ராகவா லாரன்ஸ், இந்த படத்துல ஒரு பாட்டுக்கு கெஸ்ட் அப்பியரன்ஸ்ல வந்து ஆடியிருப்பாரு.
11. தளபதியும், யுவன் ஷங்கர் ராஜாவும் சேர்ந்து பணியாற்றிய ஒரே படம் இதுதான். இந்த காம்போ எப்போ ஒன்னு சேரும்னு காத்திருந்து 18 வருஷம் ஓடிடுச்சு.
12. புதிய கீதை படத்தோட பாடல் ஹிட்டுக்கு யுவன் ஷங்கர் ராஜா காரணம்னா...பின்னணி இசைக்கு கார்த்திக் ராஜா முக்கிய காரணம்.
13. அண்ணாமல தம்பி இங்கு ஆட வந்தேன்டானு வர பாட்டுல சூப்பர்ஸ்டார் ரஜினியோட ரெஃரென்ஸ் இருக்கும்.
14. இதே பாட்டுல தான் வெஸ்டர்ன், லோக்கல் குத்து டான்ஸ்னு பட்டையை கிளப்பிருப்பாரு தளபதி.
15. பாலிவுட் நடிகை ஈஷா டியோல் தான் முன்னாடி இந்த படத்துல ஹீரோயினா நடிக்க இருந்துச்சு.
16. தளபதி படம் ரிலீஸ் அப்போல்லாம் ஏதாவது ஒரு பிரச்சனை வருதே..அப்படினு இப்போ நிறையா பேரு பேசி கேட்கிறோம்...ஆனா 2003லயே ஒரு பிரச்சனை வந்துச்சு...
படத்தொட டைட்டில் கீதை தான். அதுக்கு அப்பறோம் புதிய கீதை-னு மாத்துனாங்க.
17. கருணாஸ், விஜய் காமெடி சீன்ஸ் எதார்த்தமா அமைஞ்சிருக்கும்.
18. நம்மள சுத்தி நல்லவங்க இருந்தா, மரண படுக்கைல இருக்குறவனும் உயிரோட வருவான்ற விஷயத்தை இந்த படத்தோட கிளைமாக்ஸ் உணர்த்திருக்கும்.

வசூல் சாதனை இல்லனாலும், எப்போ டிவி-ல போட்டாலும் இந்த புதிய கீதை, தளபதி ரசிகர்களுக்கு நல்லதோர் திரைப் பாதை.

- கலாட்டா நிருபர் சக்தி பிரியன்.