காதல் வைரஸ் படத்தின் மூலம் தமிழ் திரையில் ஹீரோவாக கால் பதித்தவர் நடிகர் ரிச்சர்ட். நடிகை ஷாலினியின் தம்பியான ரிச்சர்ட் ரிஷியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் திரௌபதி. பழைய வண்ணாரப்பேட்டை திரைப்பட புகழ் இயக்குனர் ஜி.மோகன் இந்த படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.

இப்படம் உண்மை சம்பவத்தை கதைகளமாக கொண்டுள்ள திரைப்படமாகவும் அமைந்துள்ளது. தேசிய விருது பெற்ற டூ லெட் திரைப்படத்தின் கதாநாயகி ஷீலா ராஜ்குமார் நாயகியாக நடித்துள்ளார். நடிகர் கருணாஸ் இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜூபின் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. பிப்ரவரி 28-ம் தேதியான இன்று வெளியான இப்படம் பட்டையை கிளப்பி வருகிறது. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைந்துள்ளது இப்படம். தற்போது படத்திலிருந்து குக்கு பாடல் வீடியோ வெளியானது. அபே ஜோத்பூர் பாடிய இந்த பாடல் வரிகளை மணிகண்டன் எழுதியுள்ளார்.