இசைஞானி இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன் தமிழ்சினிமாவில் பாடலாசிரியர், இசையமைப்பாளர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர் என பல பரிமாணங்களில் வெற்றி பெற்றவர். இயக்குனர் கே.பாக்யராஜின் சுவரில்லா சித்திரங்கள் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான திரு.கங்கைஅமரன் அவர்கள்

தொடர்ந்து கமல்ஹாசனின் வாழ்வே மாயம் போன்ற பலவற்றில் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.கோழி கூவுது திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான திரு.கங்கை அமரன் அவர்கள் எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் என பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

இவரது மகனான இயக்குனர் வெங்கட் பிரபு தமிழில் சென்னை 600028,சரோஜா , மங்காத்தா என பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார். அடுத்ததாக இவரது இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் மாநாடு திரைப்படம் திரைக்கு வர தயாராக உள்ளது.

இவரது தாயாரான மணிமேகலை சில நாட்கள் முன்பு உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் மணிமேகலை காலமானார். அவருக்கு வயது 69. இயக்குனர் வெங்கட் பிரபு பிரேம்ஜி அமரன் தாயாரின் மறைவுக்கு திரையுலகைச் சார்ந்த பல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Mother of two fabulous sons who are always happy and spread happiness around them ..Amma we will miss u ..condolences to @vp_offl @Premgiamaren @gangaiamaren and family.. Rip😭🥲 pic.twitter.com/dA6E9CxaDV

— Studio Green (@StudioGreen2) May 9, 2021