தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் தளபதி விஜய்.பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது படங்கள் வெளியானாலே திரையரங்கங்கள் திருவிழாவாக காட்சியளிக்கும்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் 2021 பொங்கலை முன்னிட்டு வெளியானது.

கொரோனவை அடுத்து முதல் பெரிய படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெரிய வெற்றி படமாக மாறியது மாஸ்டர்.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு Gerogia-வில் நடைபெற்று முடிந்தது அடுத்தகட்ட படப்பிடிப்பு கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.நிலைமை சரி ஆனதும் மீண்டும் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடிக்கும் அடுத்த படத்தினை பல இயக்குனர்கள் இயக்கப்போகிறார்கள் என்ற தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தன,அதில் முக்கியமான ஒன்று தளபதி 66 படத்தினை தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி இயக்கவுள்ளார் என்றும் தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு இந்த படத்தினை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார் என்பதும் தான்.

தற்போது தளபதி விஜயுடன் அடுத்த படத்தில் இணைவதை தெலுங்கின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றிற்கு பேட்டி அளித்து உறுதிசெய்துள்ளார் வம்சி.இந்த படத்தின் அறிவிப்பு லாக்டவுன் முடிந்த பிறகு வரும் என்றும் இதை பற்றி தற்போது எதுவும் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.தளபதியுடன் இணைவதை தேசிய விருது பெற்ற படத்தின் இயக்குனர் உறுதிசெய்ததை அடுத்து ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

#Vijay and ⁦@directorvamshi⁩ to team-up. Dil Raju Production. The Director confirms. pic.twitter.com/OfWNZ2hUYD

— AndhraBoxOffice.Com (@AndhraBoxOffice) May 30, 2021

translation of @directorvamshi interview @actorvijay #master pic.twitter.com/MnxtBNK7px

— Alter Ego (@AlterEgoOfNandu) May 30, 2021