தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித்குமார் கதாநாயகனாக அறிமுகமான முதல் திரைப்படம் அமராவதி இத்திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் செல்வா. எஸ்.பி.பாலசுப்ரமணியம் நெப்போலியன் நாசர் மற்றும் பலர் நடித்து 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தலைவாசல் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் செல்வா. தொடர்ந்து தமிழில் பல திரைப்படங்களை இயக்கியவர் பல திரைப்படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

குறிப்பாக ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த கர்ணா பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த ஆசையில் ஒரு கடிதம் ,உன்னருகே நானிருந்தால், நான் அவன் இல்லை போன்ற திரைப்படங்களில் திரைக்கதை எழுதியுள்ளார். கடைசியாக நான் அவனில்லை பாகம் 2,நாங்க போன்ற திரைப்படங்களை எழுதி இயக்கிய இயக்குனர் செல்வா தற்போது அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகும் வணங்காமுடி திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் செல்வாவின் தந்தையான திரு.பக்தவச்சலம் சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த இயக்குனர் செல்வாவின் தந்தை திரு.பக்தவச்சலம் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த திரு பக்தவச்சலம் அவர்களுக்கு வயது 85. இயக்குனர் செல்வாவின் தந்தை மறைவை ஒட்டி திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்து வருவதை ஒட்டி, ஆக்சிசன் தட்டுப்பாடு அரசாங்கத்தையும் மக்களையும் செய்வதறியாது திணறடிக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் பல திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும் அவர்களது குடும்பத்தாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருவது அனைவரையும் சோகத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.

Famous Film director Selva’s father Bakthavachalam 85 passed away in Chennai, today at 7.15 am battling #COVID19 #RIPBakthavachalam | #selva #directorselva #COVID19 | #Coronavirus | #WearMask | #StaySafe#COVIDSecondWaveInIndia #covidchennai #CovidTamilnadu 😷#StaySafe 🏠 pic.twitter.com/nW8iiFWtfU

— RIAZ K AHMED (@RIAZtheboss) May 6, 2021