பாகுபலி படத்தின் மூலம் உலக சினிமா அளவுக்கு இந்திய படங்களும் இருக்கும் என்று சவால் விட்டவர் ராஜமௌலி.பாகுபலி படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் RRR.



RRR படத்தில் ராம்சரண் மற்றும் Jr.NTR இருவரும் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.



ராஜமௌலி சமீபத்தில் ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் பாரசைட் படம் குறித்து பேசியுள்ளார்.அந்த படம் தனக்கு பிடிக்கவில்லை என்றும்,அந்த படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே தூங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும் அது மோசமான படம் என்று நான் தெரிவிக்கவில்லை எனக்கு ஏற்ற படமாக அது இல்லை மீதக்கதையை தன் மனைவியிடம் கேட்டுத்தெரிந்து கொண்டதாக தெரிவித்தார்.