தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் பிசாசு 2. கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் பாலாவின் தயாரிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய பிசாசு திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகிவருகிறது பிசாசு 2 திரைப்படம்,

ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற பிசாசு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் சமீபத்தில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த டிரிபல்ஸ் மற்றும் நவம்பர் ஸ்டோரி உள்ளிட்ட வெப்சீரிஸ்களில் நடித்த நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில் உருவாகும் பிசாசு 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. பிசாசு 2 படத்தில் முதல் முறையாக இயக்குனர் மிஷ்கினுடன் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா. ஒளிப்பதிவாளர் சிவா சாந்தகுமார் பிசாசு 2 படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் தற்போது பிசாசு 2 படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. பிசாசு 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலை 6 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பிசாசு 2 படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

A Humble beginning.

First look of #Pisasu2 shall be launched on 3rd August at 6.00 PM#Pisasu2FirstLook@Rockfortent @andrea_jeremiah @Lv_Sri @kbsriram16 @APVMaran #KarthikRaja @teamaimpr @PRO_Priya pic.twitter.com/qxoDFg89wf

— Mysskin (@DirectorMysskin) July 29, 2021