தமிழ் சினிமாவில் பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த முன்னணி நட்சத்திர நடிகர் டாப் ஸ்டார் பிரசாந்த் இயக்குனர் பாலுமகேந்திரா , இயக்குனர் மணிரத்னம் மற்றும் இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட இயக்குனர்களின் படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அடுத்ததாக நடிகர் பிரசாந்த் பார்வையற்ற நபராக நடித்துள்ள அந்தகன் திரைப்படம் தயாராகி வருகிறது.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக அந்தகன் திரைப்படம் தயாராகிறது. அந்தகன் திரைப்படத்தை இயக்குனர், நடிகர் & தயாரிப்பாளர் தியாகராஜன் இயக்குகிறார். சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார், நவரச நாயகன் கார்த்திக், ஊர்வசி, ப்ரியாஆனந்த், யோகி பாபு, மனோபாலா, மற்றும் வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பாலிவுட்டில் நடிகை தபு நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் நடிகை சிம்ரன் நடித்துள்ளார். முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் நடிகர் பிரஷாந்த் கதாநாயகனாக நடித்துள்ள அந்தகன் திரைப்படத்தின் முக்கிய தகவல் வெளியானது.

அந்தகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதையடுத்து தற்போது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று அந்தகன் படத்தின் டப்பிங் பணிகளில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இணைந்துள்ளார். தொடர்ந்து அந்தகன் படத்தின் டீஸர் & டிரெய்லர் என அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Director @ksravikumardir starts dubbing for #Andhagan *ing @actorprashanth@actorthiagaraja Directorial @Music_Santhosh Musical#Karthik @SimranbaggaOffc @thondankani @PriyaAnand #RaviYadhav #SenthilRaghavan @iYogiBabu #Oorvasi @manobalam @vanithavijayku1 @onlynikil pic.twitter.com/jno2JJiLeZ

— Actor Kayal Devaraj (@kayaldevaraj) August 11, 2021