இன்றைய காலகட்டத்தில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்டாக அதை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்தும் வல்லமை படைத்த நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.துணை நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார்.இவரது வளர்ச்சி பல நடிகர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருந்துள்ளது.

சோலோ ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி.தனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் கிடைத்தால் வயதான கேரக்டராக இருந்தாலும் சரி மற்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கவும் தயங்குவதில்லை.சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,மெகாஸ்டார் சிரஞ்சீவி,மாதவன்,கெளதம் கார்த்திக்,STR,அரவிந்த் சுவாமி,ஜெயராம் என்று பல பெரிய நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்துள்ளார் விஜய் சேதுபதி.இதனை தொடர்ந்து அடுத்ததாக விஜயின் மாஸ்டர்,அமீர்கானுடன் ஒரு ஹிந்தி படம்,முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தரமான படங்களை வெளியிட்டு வருகிறார் விஜய் சேதுபதி.2018-ல் விஜய்சேதுபதி,கெளதம் கார்த்திக் நடிப்பில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தை ஆறுமுககுமார் இயக்கியிருந்தார்.காயத்ரி மற்றும் நிஹாரிகா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தனர்.

இந்த படத்தின் இயக்குனர் ஆறுமுககுமாருக்கு தற்போது ஒரு சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது.மலேசியாவின் சென்சார் போர்டில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அறுமுககுமார்.இந்த டீவீட்டை கீழே உள்ள லிங்கில் காணலாம்

Malaysian Film Board (Censor board ) appoints me as the committee member of Tamil Film Content and India Market @7CsPvtPte 🙏🙏🙏 pic.twitter.com/GVo626fAlp

— Arumugakumar (@Aaru_Dir) July 3, 2020