ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தாராள பிரபு. பிரபல ஹிந்தி படமான விக்கி டோனார் படத்தின் தமிழ் ரீமேக்காகும். இதில் தான்யா ஹோப் நாயகியாக நடிக்கிறார். படத்தில் சின்ன கலைவானர் விவேக் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். ஹீரோ பணத்திற்காக விந்தணுவை தானம் செய்பவர் என்பது தான் கதைக்கரு. கிருஷ்ணா மாரிமுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ஸ்கிரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு 8 இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்து இசையமைக்கவுள்ளனர். விவேக் - மெர்வின், பிரதீப் குமாரின் ஊர்கா இசைக்குழு, இன்னொ கெங்கா, ஷான் ரோல்டன், பரத் ஷங்கர், கபேர் வாசுகி, அனிருத், மேட்லீ ப்ளூஸ் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

தற்போது படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது. இதில் விந்தணுவை தானம் செய்ய ஹரிஷ் கல்யாணின் வீட்டிற்கு சென்று அணுகிறார் மருத்துவரான விவேக். பழைய பாடலை கேட்டுக்கொண்டே வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார் ஹரிஷ். ஸ்னீக் பீக் காட்சியை வைத்து பார்க்கையில் நகைச்சுவை கலந்த கமர்ஷியல் விருந்து நிச்சயம் என்று கூறலாம்.