ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தாராள பிரபு. பிரபல ஹிந்தி படமான விக்கி டோனார் படத்தின் தமிழ் ரீமேக்காகும். இதில் தான்யா ஹோப் நாயகியாக நடிக்கிறார். படத்தில் சின்ன கலைவானர் விவேக் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். ஹீரோ பணத்திற்காக விந்தணுவை தானம் செய்பவர் என்பது தான் கதைக்கரு. கிருஷ்ணா மாரிமுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ஸ்கிரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு 8 இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்து இசையமைக்கவுள்ளனர். விவேக் - மெர்வின், பிரதீப் குமாரின் ஊர்கா இசைக்குழு, இன்னொ கெங்கா, ஷான் ரோல்டன், பரத் ஷங்கர், கபேர் வாசுகி, அனிருத், மேட்லீ ப்ளூஸ் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பியது. தற்போது படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஃபேமிலி ஆடியன்ஸின் வருகை குறைவாக இருக்கும் என்றே கூறலாம்.