தமிழ் திரையுலகில் தனது அசத்தலான நடிப்பால் பல கோடி ரசிகர்களை தன்வசம் வைத்திருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பட்டாஸ். சமீபத்தில் இவர் நடிப்பில் ஜகமே தந்திரம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கி வரும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே நடிகர் தனுஷ், தன் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். தேனியில் அமைந்துள்ள கருப்பசாமி கோவிலில் பெற்றோர், ஐஸ்வர்யா தனுஷ், மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் சென்று இறை வழிபாடு செய்துள்ளார்.

ராம் குமார், கார்த்திக் நரேன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். அதுமட்டுமல்லாமல் ஆனந்த் எல். ராய் இயக்கி வரும் அத்ரஞ்கி ரே படத்திலும் நடிக்கவிருகிறார் தனுஷ்.