உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.
.
கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ் படங்கள்,சீரியல்கள்,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்த இக்கட்டான நிலையில் FEFSI தொழிலாளர்களுக்கு உதவுமாறு அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி திருத்துறையினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை செய்துள்ளனர்.இதனை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் 15 லட்சம்,நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் தலா 10 லட்ச ரூபாயும் வழங்கியுள்ளனர்.
#FEFSI Contributions By Celebrities
— RIAZ K AHMED (@RIAZtheboss) March 25, 2020
Ulaganayagan Kamal Haasan-10,00,000
Dhanush- 15,00,000
Director Shankar- 10,00,000