பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்தில் தனுஷுடன் இணைகிறார்.2016-லேயே தொடங்க வேண்டிய இந்த படம் சில காரணங்களால் தள்ளி போனது.Y Not ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஹீரோயினாக நடித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்,இந்த படத்தில் கலையரசன்,மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்,சஞ்சனா நடராஜன்,ஜேம்ஸ் காஸ்மோ,அஸ்வந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்திற்கு ஜகமே தந்திரம் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.இந்த படம் Netflix தளத்தில் வெளியாகும் என்று சில மாதங்களுக்கு முன் படக்குழுவினர் அறிவித்தனர்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் சாஷுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.சாஷ் விரைவில் குணமடைய ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் பிரார்த்தனையையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

I have tested positive for COVID-19 as of last evening. While I am quarantined at home & taking necessary precautions, I urge everyone who has come in contact with me over the last few days to monitor your health closely and get yourself tested if required. #StaySafe

— Sash (@sash041075) April 4, 2021