தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவர் நடிப்பில் கடைசியாக 2019 பொங்கலுக்கு பட்டாஸ் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து தனுஷ் ஜகமே தந்திரம்,கர்ணன்,D 43,அத்ராங்கி ரே,ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம்,தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் வி க்ரியேஷன் தயாரிப்பில் ஒரு படம்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் D44,ஆயிரத்தில் ஒருவன் 2 என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.ஜகமே தந்திரம்,கர்ணன் படங்கள் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.

D 43 படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர்.கார்த்திக் நரேன் இயக்கும் இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.இந்த படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோஹனன் நடிக்கிறார்.இந்த படத்தில் வசனங்கள் மற்றும் கூடுதல் திரைக்கதைக்காக பாடலாசிரியர் விவேக் சமீபத்தில் இணைந்தார்.

தற்போது இந்த படத்தில் தடம்,மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்திய ஸ்ம்ருதி வெங்கட் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

We are very happy to welcome the talented @smruthi_venkat on board for #D43 💐🤩 @dhanushkraja @karthicknaren_M @MalavikaM_ @gvprakash @Lyricist_Vivek pic.twitter.com/GBwFfjwOhR

— Sathya Jyothi Films (@SathyaJyothi_) January 6, 2021