தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவரது ஜகமே தந்திரம் படம் சமீபத்தில் OTT-யில் வெளியானது.

இதனை தொடர்ந்து தனுஷ் D 43,அத்ராங்கி ரே,ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம்,தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் வி க்ரியேஷன் தயாரிப்பில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் D44,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.

D 43 படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர்.கார்த்திக் நரேன் இயக்கும் இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.இந்த படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோஹனன் நடிக்கிறார்.இந்த படத்தில் ஸ்ம்ருதி வெங்கட்,சமுத்திரக்கனி,மஹேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு லாக்டவுனுக்கு பிறகு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இன்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த படத்திற்கு மாறன் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.செம மாஸான இந்த பர்ஸ்ட்லுக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

Very happy in presenting you the first look of our next film #Maaran #மாறன் with @dhanushkraja 🔥#MaaranFirstLook #HappyBirthdayDhanush @karthicknaren_M @MalavikaM_ @gvprakash @Lyricist_Vivek @thondankani @smruthi_venkat @KK_actoroffl @Actor_Mahendran pic.twitter.com/qyWdFuQNju

— Sathya Jyothi Films (@SathyaJyothi_) July 28, 2021