கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். வீட்டிலே முடங்கியிருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள் தவிர்த்து கிரிக்கெட் வீரர்களும் சமூக ஊடகங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தற்போது மனைவி குழந்தைகளுடன் டிக் டாக்கில் அசத்தி வருகிறார். சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான அல வைக்குந்தபுரம்லோ படத்தின் பாடலான புட்ட பொம்மா பாடலுக்கு டிக்டாக் செய்தார்.

தற்போது உலக நாயகன் கமல்ஹாசனின் தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகி பாடல் டியூனுக்கு தனது மனைவி, மகளுடன் நடனமாடி டிக்டாக் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

We are back again!! #challenge #family #boredinthehouse #isolation @candywarner1

A post shared by David Warner (@davidwarner31) on