தமிழ் திரையுலகில் சீரான நடிகைகளுள் ஒருவர் வரலக்ஷ்மி. தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் அறிமுகமானவர் இறுதியாக வெல்வெட் நகரம் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது டேனி என்ற படம் மூலம் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தை சந்தான மூர்த்தி இயக்கியுள்ளார். பிஜி மீடியா வொர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் வரலட்சுமியுடன் சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி, அனிதா சம்பத் ஆகியோர் நடிக்கின்றனர்.

க்ரைம் திரில்லராக உருவாகி உள்ள இப்படத்தில் வரலட்சுமி ஸ்டண்ட் காட்சிகளில் தானே ஈடுபட்டு நடித்துள்ளார். சந்தோஷ் தயாநிதி இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பியது. தற்போது படத்தின் யார் பார்த்தது பாடலின் மேக்கிங் வீடியோ வெளியானது. உதாரா உன்னிகிருஷ்ணன் பாடிய இந்த பாடல் வரிகளை தனிக்கொடி எழுதியுள்ளார்.