விஜய் டிவி தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு சேனல்.தங்களது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர்.இந்த தொலைக்காட்சியில் வேலைபார்த்த பலரும் தற்போது சினிமாவில் பிரபலன்களாக உள்ளனர்.

சிவகார்த்திகேயன்,சந்தானம் போன்ற முக்கிய நடிகர்களை உருவாக்கியது விஜய் டிவி தான்.பல துணை நடிகர்கள்,காமெடி நடிகர்கள்,இயக்குனர்கள் கதாசிரியர்கள் என்று பலரையும் அடையாளம் கண்டுள்ளது விஜய் டிவி.மேலும் கலக்கப்போவது யாரு,சூப்பர் சிங்கர் உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழகத்தில் மூலை முடுக்கில் இருக்கும் திறமைகளையும் கண்டுபிடிக்க விஜய் டிவி தவறுவதில்லை.

கடந்த வருடமும் குக் வித் கோமாளி என்ற தொடரை அறிமுகம் செய்தது விஜய் டிவி.சமையல் போட்டியில் நகைச்சுவை கலைஞர்களை இறக்கி அசத்தினர்.இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் செம பிரபலமாக இருந்தது.மேலும் இந்த தொடரில் பங்கேற்ற அனைவரும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்களாக மாறிவிட்டனர்.

குறிப்பாக புகழ்,பாலா,சிவாங்கி,மணிமேகலை,வனிதா விஜயகுமார்,ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் செம பாப்புலராக இருந்து வருகின்றனர்.தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை விஜய் டிவி விரைவில் ஒளிபரப்பவுள்ளனர்.நவம்பர் 14 ஆம் தேதி முதல் சனி-ஞாயிறு கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தொடரில் பங்கேற்கும் போட்டியாளர்களின் லிஸ்டை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.ஷகீலா,பாபா பாஸ்கர்,தர்ஷா குப்தா,பவித்ரா லக்ஷ்மி,தீபா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இதில் பங்கேற்கின்றனர்.

Contestant no 1 #Shakeela #CookWithComali - வரும் சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #VijayTelevision pic.twitter.com/uzsvrucBzr

— Vijay Television (@vijaytelevision) November 10, 2020

Contestant no 2 #DharshaGupta #CookWithComali - வரும் சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #VijayTelevision pic.twitter.com/i5gaX0w1U0

— Vijay Television (@vijaytelevision) November 10, 2020

Contestant no 6 #PavithraLakshmi #CookWithComali - வரும் சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #VijayTelevision pic.twitter.com/ZHkvIY7xDW

— Vijay Television (@vijaytelevision) November 10, 2020