ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி கடந்த வருடத்தின் சூப்பர்ஹிட் வெற்றியடைந்த திரைப்படம் கோமாளி..அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.காஜல் அகர்வால் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.யோகி பாபு,கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் 100 நாட்களை கடந்து பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் சம்யுக்தா ஹெக்டே.இந்த படத்தில் ஒரு ஹீரோயினாக நடித்த அவர் ரசிகர்களின் மனங்களை கொள்ளைகொண்டார்.இதனை தொடர்ந்து வருண் ஹீரோவாக நடித்த பப்பி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக்கன்னியாக அவதரித்தார்.

டான்சில் ஆர்வம் கொண்ட சம்யுக்தா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது டான்ஸ்,ஒர்க்கவுட் வீடியோக்களை பதிவிடுவார்.கொரோனா காரணமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க நிறைய ஒர்க்கவுட் மற்றும் டான்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்தார் சம்யுக்தா ஹெக்டே.இந்த லாக்டவுன் நேரத்தில் இவர் நிறைய ஹூப் எனப்படும் வளையத்தை வைத்து செய்யும் ஒர்க்கவுட்களை அதிகம் செய்து வந்தார்.

டிக்டாக் சில நாட்களுக்கு முன் தடைசெய்யப்பட்டது இதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டது.அச்சு அசலாக டிக்டாக்கின் அனைத்து வசதிகளும் உடையதாக இருக்கும் இது பலரையும் ஈர்த்து வருகிறது.இதில் தனது பெல்லி டான்ஸ் வீடியோ ஒன்றை சில நாட்களுக்கு முன் பதிவிட்டார் சம்யுக்தா.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி ஓயாத நிலையில் ,மீண்டும் தனது ஹூப் நடன வீடியோக்களை பதிவிட்டார் சம்யுக்தா.சம்யுக்தாவின் டான்ஸ் வீடியோவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இடையில் சில சலசலப்புகளை தாண்டி வந்த சம்யுக்தா,தற்போது தனது புதிய ஹூப் நடன வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.வளையத்தை வைத்துக்கொண்டு நடனமாடும் சம்யுக்தாவின் இந்த நடன வீடியோ ரசிகர்கள் மத்தியில் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

View this post on Instagram

So as promised, I'm posting this video Let me know what you guys think, also would appreciate song suggestions 😊 . . . PS: look at that amount of trust, eevee didn't move the entire song... hahahah jk jk she is one lazyy butt and judt doesn't care Choreography by @eshnakutty ❤ Music: RNP @anderson._paak #hoopersofinstagram #hiphophoop #hoopflow #sendingpositivevibe

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on