A.R.முருகதாசின் உதவி இயக்குனராக இருந்து டிமாண்டி காலனி படம் மூலம் இயக்குனர் ஆனவர் அஜய் ஞானமுத்து.இந்த படம் மிக சிறந்த பேய் படம் என பலரது வரவேற்புகளை பெற்றது.இதனை தொடர்ந்து இவர் இயக்கிய இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா,அதர்வா,அனுராக் காஷ்யூப்,விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.ஹிப்ஹாப் தமிழா இசையமைத்த இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் கோப்ரா படத்தினை இயக்கிவந்தார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஆனந்த் ராஜ்,ரோபோ ஷங்கர்,மியா ஜார்ஜ்,மிர்னாலினி ரவி,பூவையார்,கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.ஏழு வித்தியாச தோற்றங்களில் விக்ரம் இருக்கும் இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச்செய்தது.இந்த படத்தின் முதல் பாடல் தும்பி துள்ளல் என்ற தகவலை முதல் முறையாக கலாட்டாவுடனான நேர்காணலில் படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்திருந்தார்.இந்த பாடல் விரைவில் வெளியாகும் என்ற தகவலையும் அவர் பகிர்ந்திருந்தார்.

தற்போது இந்த பாடலின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளனர்.இந்த பாடல் வரும் திங்கள் அன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது அனைவரும் லாக்டவுனில் இருப்பதால் அனைத்து சினிமா ரசிகர்களையும்,இசை ரசிகர்களையும் இந்த விர்ச்சுவல் கொண்டாத்திற்கு அழைக்கும்படி அழைப்பிதழ் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.அதில் விக்ரம் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டியின் மினி வெர்ஷன்கள் இடம்பெற்றுள்ளன.இந்த பாடல் குறித்த தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பை கீழே உள்ள லிங்கில் காணலாம்

A virtual musical celebration like never before!
An open invite to all music & movie lovers right at ur homes!#CobraFirstSingle-#ThumbiThullal from Monday 5pm #ChiyaanVikram's #Cobra @AjayGnanamuthu @arrahman @SrinidhiShetty7 @SonyMusicSouth @JioSaavn @proyuvraaj pic.twitter.com/9GYK4MFS3C

— Seven Screen Studio (@7screenstudio) June 26, 2020