A.R.முருகதாசின் உதவி இயக்குன்னராக இருந்து டிமாண்டி காலனி படம் மூலம் இயக்குனர் ஆனவர் அஜய் ஞானமுத்து.இந்த படம் மிக சிறந்த பேய் படம் என பலரது வரவேற்புகளை பெற்றது.இதனை தொடர்ந்து இவர் இயக்கிய இமைக்கா நொடிகள் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.



சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் கோப்ரா படத்தினை தற்போது இயக்கிவந்தார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.



இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கலாட்டாவுடன் சிறப்பு நேர்காணலில் பங்கேற்ற இவர் படம் குறித்த சில முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.படத்தின் டீஸர் ரிலீஸ் குறித்து பேசிய அஜய் , படத்தின் டீஸர் என்பது படத்திற்கான ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கவேண்டும் எனவே முழுமையாக ஷூட்டிங் முடித்து பட ரிலீசுக்கு சில வாரங்களுக்கு முன்னே தான் டீஸர் அல்லது ட்ரைலர் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.