தமிழ் திரை உலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான சியான் விக்ரம் படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் கதைகளை தேர்வு செய்து ரசிகர்களை மகிழ்விப்பது வழக்கம். நடிகராக தன்னை ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அர்ப்பணித்து கிளாஸ் - மாஸ் என எல்லாப்பக்கமும் பெஸ்ட் கொடுக்கும் தேர்ந்த நடிகர் சியான்.கடைசியாக நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் ராஜேஷ்.M.செல்வா இயக்கத்தில் கடாரம் கொண்டான் திரைப்படம் வெளியானது.

தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் மற்றும் டிமான்டி காலனி & இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளது. மேலும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சியான் விக்ரம்.

இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் அவரது மகனான நடிகர் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் சியான் 60 படத்தின் முக்கிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கும் சீயான் 60 திரைப்படத்தை ஸெவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் S.S.லலித் குமார் தயாரிக்கிறார். நடிகர் விக்ரமுடன் இணைந்து நடிகைகள் வாணி போஜன், சிம்ரன் மற்றும் நடிகர் பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார். பரபரப்பாக நடைபெற்று வந்த சியான் 60 படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது . படப்பிடிப்பை நிறைவு செய்து படக்குழு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தங்களது ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தொடர்ந்து சியான் 60 படம் குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ITS A WRAP !! #Chiyaan60 #WrapForChiyaan60#ChiyaanVikram #DhruvVikram @karthiksubbaraj @Music_Santhosh @kshreyaas @SimranbaggaOffc @vanibhojanoffl @actorsimha @Lalit_SevenScr @proyuvraaj @sooriaruna pic.twitter.com/rJpxWzQYmr

— Seven Screen Studio (@7screenstudio) August 14, 2021

It's a wrap for #Chiyaan60 :) #ChiyaanVikram #WrapForChiyaan60 #DhruvVikram pic.twitter.com/kU0ozQYlU5

— karthik subbaraj (@karthiksubbaraj) August 14, 2021