A.R.முருகதாசின் உதவி இயக்குன்னராக இருந்து டிமாண்டி காலனி படம் மூலம் இயக்குனர் ஆனவர் அஜய் ஞானமுத்து.இந்த படம் மிக சிறந்த பேய் படம் என பலரது வரவேற்புகளை பெற்றது.இதனை தொடர்ந்து இவர் இயக்கிய இமைக்கா நொடிகள் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.



சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் கோப்ரா படத்தினை தற்போது இயக்கிவந்தார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.



இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் டீஸர் ரிலீஸ் அல்லது ஏதேனும் ஒரு அப்டேட் வெளியாகுமா என்று ரசிகர் ஒருவர் அஜய் ஞானமுத்திடம் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த அஜய் மிக விரைவில் வரும் என்று தெரிவித்துள்ளார்.இதனை அடுத்து சீயான் விக்ரம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Soooooooon👍🏻

— Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) June 23, 2020