கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் திரைப்படம் சியான் 60. இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இதன் படப்பிடிப்பு சென்ற மாதம் மார்ச் 10-ம் தேதி முதல் சென்னையில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. செவன் ஸ்க்ரீன் சார்பாக லலித் குமார் தயாரித்து வருகிறார்.

கோப்ரா திரைப்படத்தை முடித்து விட்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் சியான் விக்ரம். கொரோனா பரவல் அதிகமுள்ளதால், இதன் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடைசியாக தேர்தல் வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்த வந்த சியானின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகின.

சியான் 60 படத்தில் சிம்ரன், வாணி போஜன் ஆகியோர் நாயகிகளாக நடிக்க உள்ளனர். இந்தப் படம் அறிவிக்கப்பட்டபோது இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிவார் என்று கூறப்பட்டது. ஆனால், இன்று படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிவார் என்று படக்குழு அறிவித்துள்ளது.

படத்தில் நடிகர் பாபி சிம்ஹா, சனத், தீபக் பரமேஸ்வர் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். படத்தின் காஸ்டியூம் டிசைனராக பிரவீன் ராஜா இணைந்துள்ளார் என்ற அறிவிப்பு கடைசியாக வெளியானது.

இந்நிலையில் படத்தின் இசை பணிகளின் தற்போதைய நிலை குறித்து பதிவு செய்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். சியான் 60 பாடல் பணிகளுக்கான ட்ராக்கிங்கை துவங்கிவிட்டதாக கூறியுள்ளார். இதனால் எந்த எந்த பாடகர்கள் படத்தில் பாடியுள்ளனர் என்பது தெரியவரும். மேலும் சியான் விக்ரம் படத்தில் பாடுகிறாரா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Started tracking vocals for #Chiyaan60 from today. Glad to be onboard for this special movie. Wishing the best for Vikram sir and our team. #ChiyaanVikram @karthiksubbaraj @Lalit_SevenScr

— Santhosh Narayanan (@Music_Santhosh) April 14, 2021