சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து தீபாவளி விருந்தாக வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. படத்தில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, பரேஷ் ராவல், காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் பணிகளை செய்திருந்தார். கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகளில் இல்லாமல் அமேசான் ஓடிடியில் இப்படம் வெளியானது. திரையுலகினர் பலரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படம் உருவாகியுள்ளது. தற்போது சூரரைப் போற்று படம் பார்த்துவிட்டு ஜி.ஆர்.கோபிநாத் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சூரரைப் போற்று... நிறையக் கற்பனை இருந்தாலும், என்னுடைய புத்தகத்தின் மையக் கருவை அற்புதமாகப் படம்பிடித்துள்ளது. உண்மையான ரோலர் கோஸ்டர் அனுபவம். ஆம், நேற்றிரவு பார்த்தேன். நினைவுகளைத் தூண்டிய பல குடும்பக் காட்சிகளில் சிரிப்பையும் அழுகையையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

நாடகத்தன்மை இருந்தாலும், பெரும் முரண்பாடுகளுடன் கூடிய பின்தங்கிய கிராமப்புறப் பின்னணியைக் கொண்ட ஒரு தொழில்முனைவோரின் போராட்டங்கள் மற்றும் இன்னல்களுக்கு எதிரான நம்பிக்கைக்கு உண்மை சேர்க்கிறது.

என் மனைவி பார்கவியாகச் சித்தரிக்கப்பட்டுள்ள அபர்ணா சரியான தேர்வு. தனக்கென்று கனவுகளுடன் கூடிய, வலிமையான அதே நேரம் மென்மையான, ஆர்வம் நிறைந்த அச்சமில்லாத ஒரு பெண்ணான அவர் கிராமப்புறப் பெண்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கிறார்.

கனவுகளை நனவாக்கும் பைத்தியக்காரத்தனத்தை மனதில் கொண்டிருக்கும் ஒரு தொழில்முனைவோர் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா தனது சக்திவாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற இருண்ட காலங்களில் உத்வேகம் அளிக்கக் கூடிய திரைப்படம் என்று புகழாரம் சூட்டியுள்ளார் ஜி.ஆர். கோபிநாத்.

ஜி.ஆர். கோபிநாத்தின் இந்த பதிவிற்கு நன்றியை தெரிவித்து சூர்யா பதிவு செய்துள்ளார். கனவுகளை துரத்தி வெற்றி பெற்று பலருக்கும் எடுத்துக்காட்டாய் திகழும் கோபிநாத் அவர்களுக்கும், சூரரைப் போற்று படக்குழுவினருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா.

Sorarai potru ..Heavily fictionalised but outstanding in capturing the true essence of the story of my book. A real roller coaster.
Yes watched it last night. Couldn’t help laughing and crying on many family scenes that brought memories.

— Capt GR Gopinath (@CaptGopinath) November 13, 2020

Dramatised but true to the undying spirit of triumph of hope against struggles and tribulations of an entrepreneur with disadvantaged rural background over overwhelming odds.

— Capt GR Gopinath (@CaptGopinath) November 13, 2020

The portrayal of my wife Bhargavi by Aparna was very well etched out , of a woman who had her own mind , strong but soft , feisty and fearless and an inspiration to rural women especially who are equal and can be entrepreneurs in their own right.

— Capt GR Gopinath (@CaptGopinath) November 13, 2020

And kudos and big salute to Director Sudha , to have balanced very deftly a male centric story lead by Suriya by portraying a wife acted by Aparna who was a powerful counter balance in an inspiring and heartwarming way

— Capt GR Gopinath (@CaptGopinath) November 13, 2020