விஜய் தொலைக்காட்சியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 போட்டியாளராக கலந்து கொண்டவர் முகேன் ராவ் மலேசியா வாழ் தமிழரான முகேன் ராவ் பல தமிழ் சுயாதீன பாடல்களை பாடியுள்ளார். மேலும் மலேசிய தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 சிறப்பாக விளையாடி பிக் பாஸ் சீசன் 3 இன் பட்டத்தை வென்ற முகேன் ராவ் தொடர்ந்து தமிழ் திரையுலகில் கதாநாயகனாக களமிறங்கினார்.

இயக்குனர் கவின் இயக்கத்தில் தயாராகும் வேலன் திரைப்படத்தில் முகேன் ராவ் கதாநாயகனாக நடிக்க நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபு,ஹரீஷ் பரேடி,தம்பி ராமய்யா,சூரி,மரியா வின்சென்ட்,பிரிகிடா,ப்ராங்க் ஸ்டார் ராகுல்,பில்லி முரளி ஆகியோர் நடித்துள்ளனர்

ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர்கள் தயாரித்துள்ளார். வேலன் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்திருக்கும் வேலன் படத்தின் இசை குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

வேலன் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ஆடியோ உரிமத்தை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது விரைவில் வேலன் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலன் திரைப்படத்தில் பள்ளி செல்லும் மாணவன் மற்றும் கல்லூரி பயிலும் மாணவன் என இரண்டு கதாபாத்திரங்களில் முகென் ராவ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


#Velan Audio 🎵 rights bagged by @thinkmusicindia .

More Updates Very Soon.

Directed by @kavin_dir

produced by @SkymanFilms @kalaimagan20@themugenrao @sooriofficial @sivaangi_k @pradeep_1123 #Velumurugan @PriyankaNKOffl @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/IKh1wn2Wy5

— SKYMAN FILMS INTERNATIONAL (@SkymanFilms) August 9, 2021