திரையுலகில் ரசிகர்களின் மனம் கவர்ந்த குணச்சித்திர நடிகைகளில் ஒருவர் நடிகை ஆர்த்தி. குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டில் அறிமுகமானவர் வளர்ந்த பிறகு வெற்றி திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சயில் விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கும், நடிகர் கணேஷ்கருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது.

சென்ற லாக்டவுனில் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தயாரிப்பாளர்களின் நலன் கருதி இந்த ஊரடங்கில் நல்ல முடிவை எடுத்தார். ஒரு வருடத்திற்கு நான் நடிக்கின்ற படங்களுக்கு ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் வாங்கி கொள்கிறேன் என்று கூறினார். ஒவ்வொரு தயாரிப்பாளர்களும் நம்ம முதலாளி. அவர்கள் நல்லா இருந்தா தான், நாம நல்லா இருக்க முடியும். என்னோட சின்ன பங்களிப்பு இது என்று முடிவெடுத்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆர்த்தி காமெடியாக வீடியோக்கள் வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், தன்னைத் தானே கலாய்த்தும் புகைப்படங்களை வெளியிடுவார். அது தான் ரசிகர்களுக்கு ஆர்த்தியிடம் பிடித்த விஷயம். தன்னைத் தானே கலாய்த்துக் கொள்ளும் பக்குவம் அனைவருக்கும் வராது என்று பாராட்டி வருகின்றனர்.

மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அசத்தினார். தன் கணவர் கணேஷ்கருடன் சேர்ந்து நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கி வந்தார். கடந்த மாதம் ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட பாடலுக்கு தன் கணவர் கணேஷ்கருடன் சேர்ந்து நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தார்.

சமீபத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற அடிச்சுதூக்கு பாடலுக்கு ஃபேஸ் ஆப் மூலமாக தனது முகத்தை தல அஜித் குமாருடன் இணைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை தல ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். இந்நிலையில் புட்ட பொம்மா பாடலுக்கு ஃபேஸ் ஆப் மூலமாக தனது முகத்தை அல்லு அர்ஜுன் முகத்தோடு இணைத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். டோலிவுட்டுக்கே சென்று விட்டீர்களா என்று கமெண்ட்டில் கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

இந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் அலவைகுந்தபுறமுலோ. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். தமன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

My love to #AlaVaikunthapurramuloo #Buttabomma #butabomma ever gracefull our own #bunny @alluarjun #Trending # pic.twitter.com/WDCXU1fESV

— Actress Harathi (@harathi_hahaha) October 19, 2020