குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஆர்த்தி. வளர்ந்த பிறகு வெற்றி திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சயில் விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கும், நடிகர் கணேஷ்கருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது.

சென்ற லாக்டவுனில் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தயாரிப்பாளர்களின் நலன் கருதி இந்த ஊரடங்கில் நல்ல முடிவை எடுத்தார். ஒரு வருடத்திற்கு நான் நடிக்கின்ற படங்களுக்கு ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் வாங்கி கொள்கிறேன் என்று கூறினார். ஒவ்வொரு தயாரிப்பாளர்களும் நம்ம முதலாளி. அவர்கள் நல்லா இருந்தா தான், நாம நல்லா இருக்க முடியும். என்னோட சின்ன பங்களிப்பு இது என்று முடிவெடுத்தார்.

சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் ஆர்த்தி,ஃபேஸ்ஆப் சேலஞ்சை ஏற்று தன் புகைப்படத்தை ஆண் போன்று மாற்றி புகைப்படத்தை வெளியிட்டார். அதை ட்விட்டரில் வெளியிட்டு, இவர் தான் என் புது காதலர், என் க்யூட் டார்லிங். இவரை தான் நான் திருமணம் செய்யப் போகிறேன். சாரி கணேஷ்கர் என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

சமூக வலைத்தளங்களில் ஆர்த்தி காமெடியாக வீடியோக்கள் வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், தன்னைத் தானே கலாய்த்தும் புகைப்படங்களை வெளியிடுவார். அது தான் ரசிகர்களுக்கு ஆர்த்தியிடம் பிடித்த விஷயம். தன்னைத் தானே கலாய்த்துக் கொள்ளும் பக்குவம் அனைவருக்கும் வராது என்று பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அசத்தினார். தன் கணவர் கணேஷ்கருடன் சேர்ந்து நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கி வந்தார்.

ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட பாடலுக்கு தன் கணவர் கணேஷ்கருடன் சேர்ந்து நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற அடிச்சுதூக்கு பாடலுக்கு ஃபேஸ் ஆப் மூலமாக தனது முகத்தை தல அஜித் குமாருடன் இணைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை தல ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அஜித் அண்ணண் அழகு யாருக்கு வரும் என கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

தல அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கல் விருந்தாய் திரைக்கு வந்த படம் விஸ்வாசம். சிவா இயக்கியிருந்த இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருந்தது. தூக்கு துரை ரோலில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் தல அஜித்.

அண்ணண் அழகு யாருக்கு வரும்.😊💪🙏🙏🙏🙏🙏...
சும்மமா ஒரு Try...😍😍😍😍
அங்காளி பங்காளிகளா 🙏🙏🙏🔥🔥🔥#adchuthookku #Viswasam one &only #Thala pic.twitter.com/qax3d05llz

— Actress Harathi (@harathi_hahaha) October 13, 2020