விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன்-3-ல் போட்டியாளராக கலந்து கொண்ட இலங்கை தமிழரான தர்ஷன், பிக்பாஸில் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக இருந்தார். பிக்பாஸ் பட்டத்தை வெற்றி பெறாத போதும் ரசிகர்களின் மனதை வென்ற போட்டியாளராகவே தர்ஷன் விளங்கினார்.

அடுத்ததாக தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களின் R.K.செல்லுலாய்டு சார்பில் தயாராகும் கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் பிக் பாஸ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, பிக் பாஸ் புகழ் லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மலையாளத்தில் ஹிட்டான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் ரீமேக்காக தயாராகியுள்ள கூகுள் கிட்டப்பா திரைப்படத்தை இயக்குனர்கள் சபரி மற்றும் சரவணன் இணைந்து இயக்கியுள்ளனர். ஒளிப்பதிவாளர் ஆர்வி ஒளிப்பதிவு செய்ய முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கூகுள் குட்டப்பா திரைப்படத்தை கல்லால் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்நிலையில் கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா கூகுள் குட்டப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் தர்ஷன் நடிப்பில் வெளிவரவுள்ள கூகுள் கிட்டப்பா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கூகுள் குட்டப்பா படத்தின் வைரல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ...

Here’s the first look of #KoogleKuttapa my wishes to one of the coolest and respected @ksravikumardir sir @Sabari_gireesn @gurusaravanan @TharshanShant #Losliya @iYogiBabu @Prankster_Ragul @GhibranOfficial @editorpraveen @twitavvi @Kavitha_Stylist @proyuvraaj pic.twitter.com/KZXYIizfEO

— Suriya Sivakumar (@Suriya_offl) August 3, 2021