விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளராகும்,சீரியல் நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின்.பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்தார் கவின்.சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து Ekaa எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் லிப்ட் படத்தில் கவின் ஹீரோவாக நடித்துள்ளார்.இந்த படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.

இதனை தவிர இவர் நடித்த அஸ்கு மாறோ என்ற ஆல்பம் பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.படங்களில் நடிப்பது மட்டுமின்றி டாக்டர்,Beast உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி அசத்தி வருகிறார் கவின்.தற்போது இவர் நடிக்கும் அடுத்த Project குறித்த சூப்பர் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

ஆகாஷ் வாணி என்ற வெப் சீரிஸில் கவின் நாயகனாக நடிக்கிறார்.ரெபா மோனிகா ஜான் இதில் ஹீரோயினாக நடிக்கிறார்.செம ரொமான்டிக் ஆன காதல் கதையாக இந்த சீரிஸ் உருவாகிறது.இதன் ஷூட்டிங் இன்று கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தொடங்கியது என்ற தகவல் கிடைத்துள்ளது.

This cute Romance Drama webseries titled #AkashVaani shoot started today with simple Pooja following COVID norms @enoc_able @Kavin_m_0431 @reba_monica @kaustubha_media @sharathravii @rdeepakparamesh @abitha_venkat @gunasekaran_gm @santhadop @kalaivananoffl @stylist_praveen pic.twitter.com/uG0DSZsXSP

— Done Channel (@DoneChannel1) August 2, 2021