2015ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். ஆதிக் ரவிச்சந்திரன். தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.நடிகராகவும் தமிழில் சில திரைப்படங்களில் நடித்துள்ள ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வெளிவந்த நேர்கொண்டபார்வை திரைப் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஹிந்தியில் சல்மான்கான் நடித்து மெகா ஹிட்டான தபாங் 3 திரைப்படத்தை இயக்கியிருந்தார் பிரபுதேவா. அந்தத் திரைப்படத்தின் தமிழ் டப்பிங்கில் தமிழ் வசனங்களையும் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இருந்தார் என்பது கூடுதல் தகவல். இந்நிலையில் அதிக ரவிச்சந்திரனும் பிரபுதேவாவும் இணைந்து பணியாற்றிய திரைப்படம்தான் பகீரா.

பிரபுதேவாவின் வித்தியாசமான நடிப்பில் உருவாகும் பகீரா திரைப்படத்தில் ரம்யா நம்பீசன், அமீரா, ஜனனி ஐயர், காயத்ரி, சஞ்சிதா ஷெட்டி, சாக்ஷி அகர்வால் என நடிகைகள் பட்டாளமே நடித்திருக்கிறது. நடிகர் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பரதன் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.பரதன் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார்.

கணேசன் சங்கர் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின் சைக்கோ ராஜா என்ற பாடல் தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது பகீரா பகீரா சைக்கோ ராஜா நான் என ஜிவி.பிரகாஷ் குரலில் வரும் பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பிரபுதேவாவும் ரம்யா நம்பீசன் நடிக்கும் இந்த பாடல் காட்சிக்கு பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் நடன அமைப்பு செய்துள்ளார்.

பகீரா திரைப்படத்தின் சைக்கோ ராஜாபாடல் சற்று முன்பு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் வெளியான பகீரா ட்ரைலரில் பிரபுதேவா பல வித்தியாசமான கெட்டப்களில் நடித்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது எனவே ஷகிலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.