ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ.தனது முதல் படத்திலேயே வெற்றிகண்ட இந்த இளைஞர் பலரையும் கவர்ந்திருந்தார்.அடுத்ததாக தளபதியுடன் தெறி,மெர்சல்,பிகில் என்று தனது ஒவ்வொரு படத்திலும் புதிய உச்சம் தொட்டார்.



இதனை தவிர A For Apple என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தை தயாரித்திருந்தார்.இதனை தொடர்ந்து இவர் தயாராரித்துள்ள அந்தகாரம் படத்தில் கைதி,மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார்.



இந்த படத்தை விக்னராஜன் இயக்குகிறார்.பிரதீப் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படம் நேரடியாக OTTயில் வெளியாக வாய்ப்பிருப்பதாக நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் ,அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.