தமிழ் திரை உலகின் ஆகச் சிறந்த இயக்குனராக திகழும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற திரைப்படம் அசுரன். பிரபல தமிழ் எழுத்தாளர் பூமணி அவர்களின் வெட்கை நாவலை தழுவி உருவாக்கப்பட்ட அசுரன் திரைப்படத்தை கலைபுலி.எஸ்.தாணு அவர்கள் தயாரித்திருந்தார்.

நடிகர் தனுஷின் மிரட்டலான நடிப்பில் உருவான அசுரன் படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, நடிகர் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் டீ ஜே, கென் கருணாஸ், அம்மு அபிராமி, பவன், சுப்பிரமணியம் சிவா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த அசுரன் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். முன்னணி இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் இணைந்து பல விருதுகளை வாங்கிக் குவித்த சூப்பர் ஹிட் திரைப்படமான அசுரன் தெலுங்கில் ரீமேக் ஆனது. பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்கும் அசுரன் ரீமேக் திரைப்படத்திற்கு நாரப்பா என பெயரிடப்பட்டது. தமிழில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடிகை பிரியாமணி நடித்துள்ளார்.

பிரபல இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கிய நாரப்பா திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்களும் டி.சுரேஷ்பாபு அவர்களும் இணைந்து தயாரித்துள்ளனர். மணி ஷர்மா இசையமைத்திருக்கும் நாரப்பா திரைப்படத்திற்கு ஷயாம் கே நாயுடு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் தற்போது நாரப்பா திரைப்படம் நேரடியாக OTT-யில் வெளியாகிறது.

அமேசான் பிரைம் வீடியோ OTT தளத்தில் நாரப்பா திரைப்படம் வருகிற ஜூலை 20-ஆம் தேதி நேரடியாக வெளியாகவுள்ளது. தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் நாரப்பா திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

All my well-wishers and fans have been eagerly waiting to watch our film, #Narappa. Your love towards this film has been overwhelming for me and the team, who always ensured to go an extra mile just like Narappa. pic.twitter.com/5lEMa86pRb

— Venkatesh Daggubati (@VenkyMama) July 12, 2021