தமிழ் திரையுலகில் தன்னை தானே செதுக்கி கொண்டவர் தல அஜித். திரைத்துறை மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ், பிஸ்டல் ஷூட்டிங் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர். தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் வலிமை படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்தப் படத்தின் படபிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.இதன் அப்டேட்டுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

தல அஜித்தை பொறுத்தவரை தன் சினிமா வாழக்கை வேறு பர்சனல் லைஃப் வேறு என்று பிரித்து வாழுபவர். படங்களில் நடிப்பது இவரது தொழிலாக இருந்தாலும், பேஷனுக்காக பிடித்தவற்றில் ஆர்வம் காட்டி அசத்தி வருகிறார்.

கடந்த வருடம் சென்னை குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி கல்லூரியில் உள்ள ஏரோ மாடலிங் (AERONAUTICAL) டிபார்ட்மென்டுக்கு சென்று அங்கு மாணவர்களை சந்தித்தார். பின்னர் இவரும் அவர்களுடன் இணைந்து ஆராய்ச்சியில் கலந்து கொண்டார். அந்தக் குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடந்த Medical Express 2018 UAV Challenge போட்டியில் கலந்துகொண்ட தக்‌ஷா குழு சர்வதேச அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தது.

அதன் பின் ஜெர்மனி சென்று, அங்கு வாரியோ (vario) ஹெலிகாப்டர் நிறுவனத்தின் முதல்வர் கிறிஸ்டென் ஸோட்னெர்வுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கொரோனா ஊரடங்கில் கூட அஜித் ஆலோசனை செய்த தக்ஷா குழு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு அசத்தி வருகிறது.

இந்நிலையில் அஜித் ஏரோ மாடலிங் செய்து அசத்திய த்ரோபேக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அஸ்வின் காகுமனு. மங்காத்தா நாட்களில் எடுக்கப்பட்டது போல் தெரிகிறது. இதுகுறித்து அஸ்வின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பறக்க கற்றுக்கொள்வது… பல ஆண்டுகளுக்கு முன்பு, அஜித் சார் மற்றும் அரவிந்த் சார் (தீனா படத்தின் ஒளிப்பதிவாளர்) ஆகியோருடன் ஏரோ மாடலிங் அமர்வுகளில் சேர எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த சிறிய வீடியோ அந்த அமர்வின் ஒரு பார்வை.எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது அஜித் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

மங்காத்தா படம் மூலம் நமக்கு அறிமுகமானவர் அஸ்வின் காகுமனு. 7ஆம் அறிவு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதன் பின் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த, இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய, மேகா உட்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தார். தற்போது இயக்குநர் மணி ரத்னத்தின் மகத்தான ப்ராஜெக்டான, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

Many years ago, I had the opportunity of joining Ajith sir and Arvind sir (DoP of Dheena )on their aeromodelling sessions. This little video is a glimpse into that session. Interesting how commercial drones have evolved over the years. #AjithKumar #aeromodelling #Drone

A post shared by Ashwin Kakumanu (@ashwinkakumanu) on