பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை. வடசென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்திய இந்தக் கதையில் நடிப்பதற்காக ஆர்யா தனது உடலமைப்பை முழுமையாக மாற்றினார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ், ஜான் விஜய், சஞ்சனா நடராஜன், துஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.முரளி, எடிட்டராக ஆர்.கே.செல்வா, கலை இயக்குனராக டி.ராமலிங்கம், சண்டை இயக்குனராக அன்பறிவு ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்துள்ளனர். கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ஆர்யாவின் பணியை இன்று பார்வையிட்டுள்ளார் உலக நாயகன் கமல் ஹாசன். கமல் ஹாசனை சந்தித்த ஆர்யா மகிழ்ச்சியில் மழையில் நனைந்து பதிவு ஒன்று செய்துள்ளார். அதில், இதை விட ஒரு நல்ல பிறந்தநாள் பரிசு இருக்காது. இன்றைய நாள் வாழ்வில் மறக்க முடியாத சிறந்த நாள். சார்பட்டா பரம்பரை படத்திற்காக நான் செய்த வேலை குறித்து நீங்கள் கருத்து தெரிவித்ததற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் ஆர்யா. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ஆர்யா ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து அனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் எனிமி திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

இது ஒரு புறமிருக்க ஆர்யா நடிப்பில் ரிலீஸுக்கு தயாராக உள்ளது டெடி திரைப்படம். ஆர்யா நடிப்பில் உருவான அந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ளது. சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இமான் இசையில் வெளியான பாடல்கள் பிலே லிஸ்ட்டை ரூல் செய்து வருகிறது.

Can’t ask for a better birthday gift. Truly overwhelmed humbled by ur love for #SarpattaParambarai @ikamalhaasan sir 🤗🤗😘😘 It’s been de best day in my life showing u my work in #Sarpatta Tks a million for sharing ur thoughts.. still learning from u everyday #Mahendran sir 😘😘 pic.twitter.com/U9EToIv6yf

— Arya (@arya_offl) December 9, 2020