அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஆர்யா.தொடர்ந்து சர்வம்,மதராசபட்டினம்,பாஸ் என்ற பாஸ்கரன்,ராஜா ராணி என ஹிட் படங்களின் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர்.



இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மகாமுனி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் தயாராகி வரும் டெடி படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.



இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் ஆர்யா 30 படத்தை காலா,கபாலி,மெட்ராஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கவுள்ளார்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இந்த படம் பாக்ஸிங் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் என்று தெரிகிறது.

My love for sports coming alive on screen
All set to face the boxers in the ring with @beemji sir for our next 💪 It’s the most challenging film of my career. Loving the experience. #Ranjith sir is just phenomenal 😍😍😎 @Music_Santhosh @K9Studioz #AnbuArivu #Murali pic.twitter.com/1ejKMipNYh

— Arya (@arya_offl) February 20, 2020