தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்டவர் நடிகர் அருண் விஜய்.தனது செகண்ட் இன்னிங்ஸில் தொட்டதெல்லாம் வெற்றியாக இவருக்கு அமைந்து வருகிறது.மாஃபியா படத்தின் ரிலீஸை தொடர்ந்து பாக்ஸர்,அக்னி சிறகுகள் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இதனை தொடர்ந்து ஹரிதாஸ் பட இயக்குனர் GNR குமரவேலன் இயக்கும் சினம் படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார்.குப்பத்து ராஜா,சிக்ஸர் உள்ளிட்ட படங்களில் நடித்த Palak Lalwani இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தில் அருண் விஜய் போலீசாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

It's a wrap for the Emotional Crime Thriller #Sinam@arunvijayno1 @gnr_kumaravelan @gopinath_dop @shabirmusic @silvastunt @madhankarky @SureshChandraa @DoneChannel1 @reddotdzign1 pic.twitter.com/NXPRmKdk6s

— Done Channel (@DoneChannel1) March 2, 2020