தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சியால் தடம் பதித்தவர் அருண் விஜய்.இவர் கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகியிருந்த மாஃபியா படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் பிரசன்னா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.
மாஃபியா படத்தின் ரிலீஸை தொடர்ந்து அருண்விஜய் சினம்,பாக்ஸர்,அக்னி சிறகுகள்,அருண் விஜய் 31 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.கொரோனா பாதிப்பிற்கு முன் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி வந்த அருண் விஜய் 31 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வந்தார்.கொரோனா பாதிப்பு காரணாமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.
AV 31 படத்தை அறிவழகன் இயக்குகிறார்.இந்த படத்தில் ரெஜினா மற்றும் ஸ்டெபி படேல் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்திற்கு ஜிந்தாபாத் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்திருந்தது.
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது கொரோனா காரணமாக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு இந்த ஷூட்டிங் தொடங்கி முழுவதுமாக முடிக்கப்பட்டது.தற்போது இந்த படத்தின் டைட்டில் லுக் வரும் ஏப்ரல் 14ஆம் தேதியும்,பர்ஸ்ட்லுக் வரும் ஏப்ரல் 15ஆம் தேதியும் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Bang On 🔥
— All In Pictures (@All_In_Pictures) April 12, 2021
We are Coming with Back to Back updates about our Mission #AV31 Starring @arunvijayno1 @ReginaCassandra Dir by @dirarivazhagan 🎉
Title Look On Apr 14th | 1st Look On Apr 15th!
@stefyPatel @SamCSmusic @11_11cinema @thinkmusicindia @DoneChannel1 @proyuvraaj pic.twitter.com/yVHxHHXwem