ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான கதைதேர்வினால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அருள்நிதி.தொடர்ந்து தரமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளார் அருள்நிதி.

வம்சம்,மௌன குரு,டிமான்டி காலனி,ஆராது சினம்,கே 13 என்று வரிசையாக இவர் நடித்த பல படங்கள் சூப்பர்ஹிட் அடித்திருந்தன.கடைசியாக ஜீவாவுடன் இணைந்து இவர் நடித்த களத்தில் சந்திப்போம் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து டைரி,தேஜாவு,D ப்ளாக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தேஜாவு படத்தினை அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்குகிறார்.இந்த படத்தினை வைட் கார்பெட் ஃபிலிம்ஸுடன் இனைந்து PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணைந்து தயாரிக்கிறார்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மதுபாலா, அச்சுத குமார், ஸ்முருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது,இதனை தொடர்ந்து இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்ட்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த லுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Very glad to launch the
second look poster of brother @arulnithitamil starring #Dejavu #தேஜாவு

Happy Birthday producer @vijaywcf Wishing the team for success 👍

🎬 @dirarvindh
🎥 @MuthaiahG
🎵 @GhibranOfficial
✂️ @editorsiddharth
💰 @WCF2021 @Pgmediaworks@teamaimpr pic.twitter.com/fZqYfq0NM0

— M.Sasikumar (@SasikumarDir) July 22, 2021