தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.கொரோனா பாதிப்பு குறைந்த பின் இந்த படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் முக்கிய வேடத்தில் கைதி படத்தில் நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார்.இவரது கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இந்த படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கும் அர்ஜுன் தாஸ்.இந்த படத்தின் வாய்ப்பு தனக்கு ஒரு வருடத்திற்கு முன் கிடைத்தது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அர்ஜுன் தாஸ்.இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

Same time last year a call that changed my life
“Vaa machi welcome to #Thalapathy64 #Master “ A conversation that will stay with me forever.
Thank you @Dir_Lokesh Sir 🤗@actorvijay Sir @Lalit_SevenScr Sir @XBFilmCreators @Jagadishbliss bro for the opportunity.#lifetimesettlement

— Arjun Das (@iam_arjundas) November 6, 2020