தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. படத்தின் விநியோக உரிமையை செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோ கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஏப்ரல் மாதம் வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் முதல் சிங்கிளான ஒரு குட்டி கதை பாடல் வெளியாகி ட்ரெண்டானது. அருண் ராஜா எழுதிய இப்பாடல் வரிகளுக்கு விஜய் குரல் தந்துள்ளார்.

தற்போது ராக்ஸ்டார் அனிருத் அவரது நண்பர்களுடன் சேர்ந்து இப்பாடலுக்கு டிக்-டாக் செய்கிறார். வெளியான மூன்று நாட்களில் 13 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது இப்பாடல்.

Let me sing you a kutti story 🤩

Rockstar @anirudhofficial 's entry into @TikTok_IN with a video ft.#KuttiStory with some tiktokers! 🙌🏻 pic.twitter.com/sMHzCP63AV

— Anirudh FP (@Anirudh_FP) February 16, 2020