XB ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்து உருவாகிய திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் ஷாந்தனு, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சில தினங்கள் முன்பு மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் சென்னை லீலா பேலஸில் அசத்தலாக நடைபெற்றது. வழக்கம் போல் தளபதியின் பேச்சுக்கு அரங்கமே அதிர்ந்தது. பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

தற்போது அனிருத் அவரது ஸ்டூடியோவில் குட்டி கதை பாடல் பாடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அருகில் கிடாரிஸ்ட் கேபா உள்ளார். Quit பண்ணுடா பாடலையும் பாடியுள்ளார். மாஸ்டர் திரைப்பட ஆல்பத்தில் வெளியான அனைத்து பாடல்களும் ஹிட்டாகி வருகிறது.